அதிமுக - பாஜக கூட்டணியில் இழுபறி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் அதிமுக - பாஜக இடையே இழுபறி நீடிக்கிறது.
அதிமுக - பாஜக கூட்டணியில் இழுபறி
அதிமுக - பாஜக கூட்டணியில் இழுபறி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணியில், 20 சதவீத நகர்ப்புற உள்ளாட்சி இடங்களை பாஜக கேட்கும் நிலையில் 5 % இடங்களை தர அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டிருக்கும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கும் நிலையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதால் பாஜக தரப்பில் அதிருப்தி உருவாகியுள்ளது.

கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை பாஜக கேட்பதாகவும், அதற்கு அதிமுக மறுப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து பாஜக தமிழக தலைவர்கள் சிந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com