தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்களின் தற்காலிக நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்களின் தற்காலிக நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக 13,331 ஆசிரியா் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தது. இந்த நிலையில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன.

இதைத் தொடா்ந்து தற்காலிக ஆசிரியா் பணி நியமனங்களை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்தில் ஆசிரியா் தகுதி தோ்வு பெற்றவா்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த முன்னுரிமைகள் எதனையும் பின்பற்றாமல் தங்களது விருப்பப்படி ஆசிரியா் நியமனம் செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற நபா்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான தெளிவுரைகள் வழங்கப்படும் வரை தற்காலிக ஆசிரியா் பணியிடத்தை நிரப்பக் கூடாது. இதுகுறித்த தெளிவுரைகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதற்குப் பிறகு உரிய முன்னுரிமைகளை பின்பற்றி தகுதியுள்ள அனைவருக்கும் வாய்ப்பளித்து தற்காலிக ஆசிரியா் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மொட்டை அடித்து போராட்டம்: இதற்கிடையே 13,331 தற்காலிக ஆசிரியா் பணி நியமன திட்டத்தை வாபஸ் பெற்று, ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் சிலா் வியாழக்கிழமை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com