காய்ச்சலால் உங்க பிள்ளைங்க பள்ளிக்குப் போகலையா? இதுதான் காரணமாம்!

பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகும் நிலையில், ஒரு வகுப்புக்கு 3 - 4 பிள்ளைகளுக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.
காய்ச்சலால் உங்க பிள்ளைங்க பள்ளிக்குப் போகலையா? இதுதான் காரணமாம்!
காய்ச்சலால் உங்க பிள்ளைங்க பள்ளிக்குப் போகலையா? இதுதான் காரணமாம்!


சென்னை: தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம், கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகும் நிலையில், ஒரு வகுப்புக்கு 3 - 4 பிள்ளைகளுக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.

பள்ளிகள் திறக்கப்பட்டு சில குழந்தை ஒரு வாரம் தான் சென்றிருப்பார்கள். அதற்குள் வயிற்று வலி அல்லது காய்ச்சல் அல்லது சளித் தொல்லை. இதனால் அச்சமுற்ற பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக் கொள்கிறார்கள். 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய சோதனையில், ஒவ்வொரு வகுப்பறையிலும் 3 முதல் நான்கு பிள்ளைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக துவக்கப்பள்ளி வகுப்புகளில்தான் இது அதிகமாக இருக்கிறது.

பள்ளிகளில் குழந்தைகள் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்கும்படி வலியுறுத்த முடியவில்லை, பாடங்களைப் படிக்கும் போது அது அவர்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம். பள்ளிகளில் வகுப்புகளை சிறியவை. அதனையால் சமூக இடைவெளியையும் பின்பற்றுவது சிரமம் என்பது பள்ளி நிர்வாகங்கள் கூற்றாக உள்ளது.

ஒரு பக்கம் கரோனா அதிகரித்துக் கொண்டே வருகிறது என்ற தகவல் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில், பொதுவாக இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. வழக்கமாக மழைக்கால தொடங்கும் போது வரும் காய்ச்சலாகத்தான் இருக்கும். ஆனால், பள்ளிகளில் காய்ச்சல் அதிகரிப்பதால், பள்ளி வளாகங்களிலேயே காய்ச்சல் சிறப்பு முகாம்களை சுகாதாரத் துறை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல குடியிருப்புப் பகுதிகளிலும் அதனை நடத்தலாம் என்கிறார் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் பி. பாட்ரிக் ரெய்மண்ட்.

சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகையில், வழக்கமாக குழந்தைகள் வெளியே வரும் போது, பல்வேறு சூழல்கள் மற்றும் சக பிள்ளைகள் மூலமாக ஏராளமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் தொற்று ஏற்பட்டு, அதற்கு எதிராக உடல் போராடும் போது இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிள்ளைகள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டதால், அவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றால் குறைந்துவிட்டது என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கிறார்.

சரிவிகித உணவு மற்றும் போதுமான நீர்ச்சத்து ஆகியவை குழந்தைகளுக்கு உறுதி செய்யப்படுவது மட்டுமே தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க உதவும். பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை நிச்சயம் உருவாக்கும். எல்லாக் குழந்தைகளும் எப்போதுமே இதுபோன்ற பாதிப்புக்குள்ளாகிக் கொண்டே இருக்க மாட்டார்கள். பெற்றோர்களும் காய்ச்சல் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம். கரோனாவாக இருந்தாலும் அது குழந்தைகளை அவ்வளவு மோசமாக பாதிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் கமலா நாதன்.

இதற்கிடையே கரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க, பள்ளிகள் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்குள் நுழையும்போது அவர்களது உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது அவசியம். 

பள்ளியில் இருக்கும் போது குழந்தைகள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளில் கைகளைக் கழுவ சோப்பு மற்றும் போதுமான தண்ணீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com