சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நவீன முறையில் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன்

சென்னை வள்ளுவர் கோட்டம் ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைப்பு செய்யப்படும் என செய்தித் துறை அமைச்சர்  சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :8 ஜூலை 2022, 8:04 am

DIN

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைப்பு செய்யப்படும் என செய்தித் துறை அமைச்சர்  சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை வள்ளூவர் கோட்டத்தில்  செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர்  மேற்கொள்ளப்பட உள்ள சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 

Story image


 
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: 

முன்னாள் முதல்வர் கலைஞரால் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிறகு சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. சமீபத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தபொழுது, வள்ளுவர் கோட்டம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார். வள்ளுவர் கோட்டம் 30 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கலையரங்கம் குளிர்சாதன வசதியோடு நவீன முறையில் சீரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் இந்த அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். உலக செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

எனவே, பொதுப் பணித் துறை சார்பில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர்  சாமிநாதன் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.