பள்ளிகளில் வேலைவாய்ப்புப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. 
பள்ளிகளில் வேலைவாய்ப்புப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து


பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யப்பட்டு வந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது பள்ளிகள் மூலம் தங்களது கல்வித் தகுதிகளை நேரடியாக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு அனைவருக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.  

மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் http://www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்துகொள்ளலாம். 

வேலைவாய்ப்புப் பதிவு, கூடுதல் பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை இ-சேவை மையங்களிலும் பதிவு செய்துகொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com