சேலத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்!

சேலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 
வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்
வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்

சேலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தமிழகம் முழுவதும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது 

அதன் ஒருபகுதியாக, சேலம் ஊராட்சி ஒன்றியம் 8 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஆண்டிபட்டி மற்றும் வேடுகாத்தான்பட்டி பகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறிப்பாக தள்ளாடும் வயதிலும் தடி ஊன்றி முதியோர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். 

மேலும், கரோனா தொற்று காரணமாக வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை தூய்மைப்படுத்திய பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.  வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். 

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம் ஒவ்வொரு வாக்கு மையத்திலும் சிசிடிவி காட்சிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், 

இதேபோல மின்னாம்பள்ளி, பூவனூர், நடுப்பட்டி, பொட்டனேரி, புல்லா கவுண்டம்பட்டி, தேவியாங்குறிச்சி, கிழக்கு ராசபாளையம், எலவம்பட்டி,  நீர்மூழ்கி குட்டை ஆகிய 12 இடங்களில் காலை முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com