கூத்தாநல்லூர்: நீட் தேர்வுக்கு மூக்குத்தி கழற்ற முடியாமல் மாணவிக்கு மூக்கில் ரத்தம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் மூக்குத்தியை கழற்றும் போது, மூக்கில் ரத்தம் வந்து
கூத்தாநல்லூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் மூக்குத்தியை கழற்றும் போது, மூக்கில் ரத்தம் வந்து கழற்றப்பட்டது. 
கூத்தாநல்லூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் மூக்குத்தியை கழற்றும் போது, மூக்கில் ரத்தம் வந்து கழற்றப்பட்டது. 

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் மூக்குத்தியை கழற்றும் போது, மூக்கில் ரத்தம் வந்து கழற்றப்பட்டது. 

கூத்தாநல்லூர் டெல்டா பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வு எழுதுவதற்கு திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், நன்னிலம், கொரடாச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 46 மாணவர்கள், 98 மாணவிகள் என மொத்தம் 144  பேர் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன், காலை 10 மணி முதல், டெல்டா பப்ளிக் பள்ளிக்கு வரத் தொடங்கினர். மதியம் 2 மணிக்குத்தான் தேர்வு என்பதால், கடும் வெய்யிலாக இருந்ததாலும் அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அமர்ந்தனர். 

நீட் தேர்வு எழுத வந்தவர்களில், 44 மாணவர்கள், 91 மாணவிகள் என மொத்தம் 135 பேர் வந்திருந்தனர். 7 மாணவிகள், 2 மாணவர்கள் என 9 பேர் தேர்வு எழுத வரவில்லை. 

நீட் தேர்வு எழுத வந்தவர்களில், ஒரு மாணவரின் விண்ணப்ப மனுவில் பெற்றோரின் கையெழுத்து இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பெற்றோரை அழைத்து கையெழுத்து வாங்கப்பட்டது. மற்றொரு மாணவருக்கு ஆதார் அட்டை இல்லாததால், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்றுக் கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். 

மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு மாணவர் ஆதார் கொண்டு வரவில்லை. ஆனால், அலைபேசியில் ஆதார் உள்ளது. நகல் எடுப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடைகள் இல்லை. மிகப் பெரும் சிரமத்திற்கிடையே, கருப்பு வெள்ளையில் ஆதார் எடுத்துக் கொடுத்ததால், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். 

சோதனைகளுக்குப் பிறகு, தேர்வு நடைபெறும் கட்டடத்திற்குள் அனுமதிக்கப்பட்டும் மாணவர்கள்.

4 மாணவிகள் மூக்குத்தி போட்டிருந்தார்கள். அதில், நன்னிலம் பூந்தோட்டத்தைச் சேர்ந்த மாணவிக்கு மூக்குத்தியை கழற்ற முடியாமல் சிரமத்திற்குள்ளான போது, மூக்கில் ரத்தம் வந்து விட்டது. உடன், மாணவியின் தந்தை, லெட்சுமாங்குடி பாலத்தருகே உள்ள அடகுக் கடைக்கு மாணவியை அழைத்துச் சென்று, ஆயுதம் மூலம் மூக்குத்தியை கழற்றப்பட்டது.

மேலும், 11.30 மணி முதல் மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சரிபார்த்து, நகைகள், பேனா, அலைபேசி, முகக்கவசம், கலர் குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, தேர்வு நடைபெறும் கட்டடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

அதன் பின்னர், மெட்டல் டிடக்டர் மூலம் 3 பேர், கைரேகை பரிசோதனை இருவர் என பரிசோதனைகளை முடித்து, மதியம் 2 மணிக்கு, ஒரு அறைக்கு 24 பேர் என 6 அறைகளில், 135 மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதத் தொடங்கினர். 

நீட் தேர்வுக்கான மேற்பார்வையாளர் அபிராமி, டெல்டா பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜோஸ்பின், துணை முதல்வர் சுருளி நாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நீட் தேர்வு பணிகளைக் கவனித்தனர்.

பாதுக்காப்பு ஏற்பாடுகளை, கூத்தாநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் போலீசார் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com