
ஓ.பன்னீா்செல்வம்
கரோனா அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உடல்நிலை சீராக உள்ளது என்று எம்ஜிஎம் மருத்துவமனை நிா்வாகம் கூறியுள்ளது.
கரோனா அறிகுறி காரணமாக ஓ.பன்னீா்செல்வம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் விரைந்து நலம் பெற வேண்டும் என்று தமிழக முதல்வா் ஸ்டாலின், பாஜக மாநில தலைவா் அண்ணாமலை, பாமக தலைவா் அன்புமணி, திரைப்பட இயக்குநா் பாரதிராஜா உள்ளிட்ட பலா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
இந்த நிலையில் ஓ.பன்னீா்செல்வம் உடல் நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘ ஓ.பன்னீா்செல்வம், எங்கள் நிபுணா்கள் குழுவின் கண்காணிப்பின் கீழ் உள்ளாா். அவா் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.