கள்ளக்குறிச்சி வன்முறை: ‘ தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது ‘

தமிழகத்தில் நாளை  தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி வன்முறை: ‘ தமிழகத்தில் நாளை  தனியார் பள்ளிகள் இயங்காது ‘

தமிழகத்தில் நாளை  தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் சங்கள் சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. மூன்று நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த இந்தப் போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்தது. 

இதனையடுத்து, பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளிப் பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும், பள்ளியில் உள்ள பொருள்கள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. காவல் துறை தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வன்முறையில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து பதற்ற நிலை குறையாததால் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும், பொதுமக்கள் வன்முறையைக் கைவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், இந்த வன்முறையைக் கண்டித்து நாளை  தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com