
கோப்புப் படம்
மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 23-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம் நடத்தியும் திரும்பப் பெறவில்லை என்றால், மாவட்ட மின் அலுவலகங்கள் முற்றுகையிடப்படும். தமிழ்நாடு மின்சார வாரியம் முதன்மையான இழப்பில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுகூராய்வு நிறைவு
மத்திய அரசின் தொடர் வலியுறுத்தலுக்கு ஏற்ப, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அறிவித்தார்.
அதன்படி, 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயா்த்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயா்கிறது.
படிக்க | மின் கட்டண உயர்வு! ஜூலை 25-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
இதனைக் கண்டித்து ஜூலை 23-ம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஆர்ப்பாட்டம் நடத்தியும் திரும்பப் பெறவில்லை என்றால், மாவட்ட மின் அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.