கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறுகூறாய்வு முடிந்தது

கனியாமூர் தனியார் பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் மறுகூறாய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முடிந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கனியாமூர் தனியார் பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடல் மறுகூறாய்வு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முடிந்தது.

உயர்நீதிமன்றம் அனுமதி தந்த நிலையில் பெற்றோர் இல்லாமல் மறுகூறாய்வு நடத்தப்பட்டது. மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி, கீதாஞ்சலி மற்றும் கோகுலரமணன் ஆகியோர் சிறுமியின் உடலுக்கு மறுகூறாய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் பள்ளி மாணவி இறப்பு தொடா்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெற்ற இளைஞா்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னதாக மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அந்த மனுவில், தனது மகளின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு மறு உடல் கூறாய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இதனை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் உடலை மறுகூறாய்வு செய்யவும், உடல் கூறாய்வு முழுவதையும் விடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவா் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுலநாதன் ஆகியோர் முன்னிலையில் மாணவி உடல் இன்று மறுகூறாய்வு செய்யப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com