சேவூரில் தனியார் குழுக்களின் ரூ.2.55 லட்சம் மோசடி: தாய், மகள் தலைமறைவு

சேவூரில் தனியார் குழுக்களின் ரூ.2.55 லட்சம் மோசடி: தாய், மகள் தலைமறைவு

சேவூரில் தனியார் குழுக்களில் ரூ.2.55 கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவான தாய், மகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சேவூரில் தனியார் குழுக்களில் ரூ.2.55 கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவான தாய், மகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து சேவூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, 

சேவூர், சந்தையப்பாளையம் பகுதியில் தாய் தனபாக்கியம், மகள் கௌரிசுரேஷ் ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களுடன் எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்கள் இணைந்து பல்வேறு தனியார் நிதி நிறுவன குழுக்களிடம் கடன் பெற்றுத் திருப்பி செலுத்தி வந்தோம். ஆனால் தாய் தனபாக்கியம், மகள் கௌரிசுரேஷ் ஆகியோர் மட்டும் கடனை திருப்பி செலுத்தாமல் தாமதித்து வந்தனர். 

தற்போது இவர்கள் எங்கள் பகுதியை விட்டுத் தலைமறைவாகி விட்டனர். இதனால் தனியார் நிதி நிறுவன குழுதாரர்கள், ஜாமீன் கொடுத்த எங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், மன உளைச்சலுக்கு ஆளாகி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வருகிறது. ஆகவே 9க்கும் மேற்பட்ட குழுவில் ரூ.2.55 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றுத் தலைமறைவான தனபாக்கியம், கௌரிசுரேஷ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர். 

புகாரைப் பெற்றுக் கொண்ட சேவூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தலைமறைவானவர்கள் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com