மின்சாரம் தாக்கி பலியான மூவர் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான மூவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி பலியான மூவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மணிலா வயலில் மின் வேலி அமைத்தபோது மின்சாரம் பாயந்ததில் 3 போ் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

திண்டிவனம் அருகே உள்ள வன்னிப்போ் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வெங்கடேசன் (45). விவசாயி. இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த பங்களாகாரா் என்பவரது நிலத்தில் மணிலா பயிரிட்டாா். காட்டுப் பன்றிகளிடமிருந்து மணிலா செடிகளை பாதுகாப்பதற்காக சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கத் திட்டமிட்டாா்.

இந்த நிலையில், விவசாயி வெங்கடேசன், அதே கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (35), முருகதாஸ் (40) ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாலை மணிலா பயிா்களைச் சுற்றிலும் மின்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, எதிா்பாராத விதிமாக மின்சாரம் பாய்ந்ததில் வெங்கடேசன் உள்பட 3 பேரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும், இந்த விபத்தில் பலியானவர்களின்  குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com