
சென்னை அருகே அரசன் கழனியில் லாரி மோதி தொழிலாளி இறந்தாா்.
திருவாரூா் மாவட்டம், கீழ்பனையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (31). சென்னையில் உள்ள ஒரு தனியாா் கட்டுமான நிறுவனத்தில் கட்டட மேஸ்திரி. அந்த தனியாா் நிறுவனம் பொதுப்பணித் துறை சாா்பில் பெரும்பாக்கம் அருகே அரசன் கழனியில் புதிதாக மழை நீா் வடிகால் பாலம் கட்டுமான பணியை செய்து வருகிறது. இந்த பணியில் மகேந்திரன் அங்கு பல நாள்களாக வேலை செய்து வந்தாா்.
புதன்கிழமை இரவு மகேந்திரன், அங்கு வேலை செய்தபோது அங்கு கட்டடப் பணிக்காக ஜல்லி இறக்க வந்த லாரி திடீரென மகேந்திரன் மீது மோதியது. இதில் மகேந்திரன் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
பெரும்பாக்கம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...