மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நினைவு நாள்: அரசியல் கட்சியினர் அஞ்சலி 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் நினைவு நாளையொட்டி, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் தாமிரவருணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் நினைவு நாளையொட்டி, தாமிரவரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் அரசியல் கட்சியினர்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் நினைவு நாளையொட்டி, தாமிரவரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் அரசியல் கட்சியினர்.


திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் நினைவு நாளையொட்டி, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இயக்கத்தினர் தாமிரவருணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காலை 9 மணிமுதல் மாலை 5.15 மணிவரை அஞ்சலி செலுத்த அணுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரில் துணை ஆணையர்கள் தலைமையில் 800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு கடந்த 1999 ஆம் ஆண்டு கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றபோது போலீசார் தடியடி நடத்தி அவர்களை துரத்தினர். போலீசாரின் அடிக்கு பயந்து ஓடிய தொழிலாளர்கள் 17 பேர் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஆண்டுதோறும் ஜூலை 23 ஆம் தேதி மாஞ்சோலை தொழிலாளர்களின் நினைவு நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தாமிரவருணி ஆற்றில் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் சனிக்கிழமை மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நினைவு நாளையொட்டி பாஜக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தாமிரவருணிஆற்றில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இதையொட்டி முன்னெச்சரிக்கையாக தாமிரவருணி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ரப்பர் படகுகள் மூலம் ஆற்றில் இறங்கும் நபர்களை கண்காணித்து வருகின்றனர். 

நெல்லை சந்திப்பு மற்றும் வண்ணாரப்பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலம் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எனவே, அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க மாநகர காவல் ஆணையர் அவிநாஷ் குமார் உத்தரவின் பேரில் இரண்டு துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் வண்ணாரப்பேட்டை நெல்லை சந்திப்பு கொக்கிரக்குளம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து சனிக்கிழமை மாலை 5 மணி வரை அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com