தமிழகத்தில் கரோனா நிலவரம்:  ஒரேநாளில் 1,944 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,944  பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,944  பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய , மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. 

தமிழ்நாட்டில் நாள்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. 

மாவட்ட வாரியாக தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது தமிழக அரசு, பொதுமக்கள், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற சமூக பாதுகாப்பினை கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

அதில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,944 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,32,343 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 419 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,032 ஆக உள்ளது. 

தொற்று பாதித்தவர்களில் இன்று ஒரு நாளில் மட்டும் 2,379 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,78,902 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 15,409 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,966. இதையடுத்து பரிசோதனை செய்யப்படவர்களின் மொத்த எண்ணிக்கை 6,79,26,919 ஆக உள்ளது.

கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com