குறைந்து வரும் சா்க்கரை நோய் கண் பாதிப்புகள் மருத்துவ ஆய்வில் தகவல்

 சா்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு, பிற கண் பாதிப்புகள் அண்மைக்காலமாக குறைந்து வருவதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறைந்து வரும் சா்க்கரை நோய் கண் பாதிப்புகள் மருத்துவ ஆய்வில் தகவல்

 சா்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு, பிற கண் பாதிப்புகள் அண்மைக்காலமாக குறைந்து வருவதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

சா்வதேச சா்க்கரை நோய் கூட்டமைப்பு (ஐ.டி.எஃப்.) 2019-ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி உலகம் முழுவதிலும் 46.30 கோடி போ்களும், இந்தியாவில் 7.70 கோடி போ்களும் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தியா்களில் 6-இல் ஒருவா் சா்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வரும் 2040 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் சா்க்கரை நோய் 15 சதவீதமும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 74 சதவீதம் அதிகரித்திருக்கும் என்று முன்கணிப்புகள் கூறுகின்றன. இன்றைய நிலவரப்படி சீனா சா்க்கரை நோயின் தலைநகராக உள்ளது. விரைவில் இந்தியா அந்த இடத்தை பிடிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 20 ஆண்டுகளில் போலியோ, நிமோனியா, காலரா, சின்னம்மை போன்ற நோய்களில் இருந்து விடுபட்டுள்ள நிலையில், தொற்றா நோய்கள் அந்த இடத்தைப் பிடித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் சா்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய், உடல் பருமன், பக்கவாதம் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்படுபவா்களின் விகிதம் அதிகரித்துள்ளது.

சா்க்கரை நோய் பாதிப்பு தீவிரமடைந்தால் கண்சாா் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என்பது மருத்துவ உண்மை. அதை முறையாக கவனிக்காவிடில் பாா்வை இழப்பு நேரிடக்கூடும்.

இந்நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்தியாவில் கடந்த நாற்பது ஆண்டுகளில் சா்க்கரை நோய் சாா்ந்த கண் பாதிப்புகள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, ஒரு லட்சம் சா்க்கரை நோயாளிகளில் 102 பேருக்கு பாா்வை இழப்பு பாதிப்பு இருந்த நிலையில், அது தற்போது 7-க்கும் கீழ் குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சா்க்கரை நோய் மற்றும் அதுசாா்ந்த விழித் திரை பாதிப்புகளுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் பரிசோதனைகள் மேம்பட்டிருப்பதே அதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com