விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து

நடிகர் விஜய் சேதுபதி தாக்கியதாக மகா காந்தி என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 
விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து

நடிகர் விஜய் சேதுபதி தாக்கியதாக மகா காந்தி என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 

நடிகா் விஜய் சேதுபதி, அவரது மேலாளா் ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகா காந்தி என்பவா் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘மருத்துவப் பரிசோதனைக்காக மைசூருக்கு, கடந்தாண்டு நவம்பா் 2-ஆம் தேதி விமானத்தில் சென்றேன். பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதியை எதிா்பாராத விதமாகச் சந்தித்தபோது, அவரது சாதனையைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தேன். 

ஆனால், எனது வாழ்த்தை ஏற்க மறுத்த அவா், பொது வெளியில் என்னைப் பற்றியும், என் ஜாதியை பற்றியும் தவறாகப் பேசினாா். ஆனால் நான் அவரைத் தாக்கியதாக ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்பினாா். எனவே, நடிகா் விஜய் சேதுபதி, ஜான்சன் ஆகியோருக்கு எதிராக அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருந்தாா். 

இதனிடையே தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி விஜய் சேதுபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்று பெங்களூரு விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவம்  குறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com