10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது!


10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. 

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு பொதுத்  தேர்வுகள் திட்டமிட்டப்படி நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த மாதம் 5 ஆம் தேதி 1 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வு 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. 11 ஆம் வகுப்பு தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவர்களும், 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தலா 8 லட்சம் மாணவர்களும் எழுதினர்.

இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று புதன்கிழமை (ஜூன்1) தொடங்கி நடைபெற்று வருகிறது.  

மாநிலம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வரும் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 30 விடைத்தாள்களை மட்டுமே திருத்த வேண்டும் என்றும் இயற்பியல், வேதியியல், கணித பாட விடைத்தாள்களை ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்களை மட்டுமே திருத்த வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலராகவும், கணினி ஆப்பரேட்டர்கள் 2 அணியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்கும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பின் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 17 ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7-ஆம் தேதியும் வெளியாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com