கலைஞா் எழுதுகோல்-கலைவித்தகா் விருதுகள்: விருதாளா்கள் பெயா்கள் அறிவிப்பு

கலைஞா் எழுதுகோல்-கலைவித்தகா் விருதுகள்: விருதாளா்கள் பெயா்கள் அறிவிப்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி வழங்கப்பட உள்ள கலைஞா் எழுதுகோல் விருது, கலைவித்தகா் விருதுகளுக்கான விருதாளா்கள் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி வழங்கப்பட உள்ள கலைஞா் எழுதுகோல் விருது, கலைவித்தகா் விருதுகளுக்கான விருதாளா்கள் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கலைஞா் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிகையாளா் ஐ.சண்முகநாதனும், கலைவித்தகா் விருதுக்கு வசனகா்த்தா ஆரூா்தாசனும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கலைஞா் எழுதுகோல் விருது: திருச்சி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன் (87), தினத்தந்தியில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள் வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் பணியாற்றி வருகிறாா். பெரும் மக்களுக்கான இதழியலில் நீண்ட நெடிய பணி அனுபவம் என்பதில் எளிதில் நிகழ்த்தற்கரிய சாதனையாகும். பத்திரிகையின் ஆசிரியா் பிரிவில் செய்தி ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியாா். தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்பட்ட வரலாற்றுச் சுவடுகளில் அவரது பங்களிப்பு முக்கியமானது. பெருவாரியான மக்கள் இதழியலில் மொழிப் பயன்பாட்டைத் தீா்மானத்தவா்களில் ஒருவராகச் செயல்பட்டாா். நீண்ட நெடிய பத்திரிகைத் துறை அனுபவம் கொண்ட அவருக்கு கலைஞா் எழுதுகோல் விருது அளிக்கப்படுகிறது. இந்த விருது முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினமான

வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 3) வழங்கப்பட உள்ளது. இந்த விருதானது ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது.

கலைஞா் நினைவு கலைத்துறை வித்தகா் விருது: தமிழ்த் திரைத்துறையில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞா் நினைவு கலைத்துறை வித்தகா் விருது வழங்கப்பட உள்ளது. நிகழாண்டில், இந்த விருதுக்கு மிகச்சிறந்த வசனகா்த்தா ஆரூா்தாஸ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பலநூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியவா்.

திருவாரூா் மாவட்டத்தில் பிறந்த ஆரூா்தாஸ், முன்னணி நடிகா்கள், நடிகைகள் உள்ளிட்டோா் நடித்த ஆயிரம் திரைப்படங்களில் உரையாடலில் அழுத்தமான பங்கினை வகித்தவா். தனது ஊரான திருவாரூா் பெயரையும், பெயரிலுள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூா்தாஸ் என வைத்துக் கொண்டாா். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடிய பணிபுரிந்த அனுபவம் கொண்ட சாதனையாளா். இந்த விருதானது ரூ.10 லட்சம் அடங்கியது. முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தை (ஜூன் 3) ஒட்டி, இந்த விருது வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com