மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை மாற்றக் கோரி தொடர் ஓட்ட போராட்டம்: போலீசார் தடுத்து நிறுத்தம்

லோயர் கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை வைகை அணைக்கு மாற்றக் கோரி விவசாய சங்கத்தினர் வெள்ளிக்கிழமை தொடங்கிய தொடர் ஓட்ட போராட்டத்தை குமுளி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
லோயர் கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை மாற்றக் கோரி தொடர் ஓட்ட போராட்டம்
லோயர் கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை மாற்றக் கோரி தொடர் ஓட்ட போராட்டம்


கம்பம்: லோயர் கேம்ப் மதுரை கூட்டு குடிநீர் திட்டத்தை வைகை அணைக்கு மாற்றக் கோரி விவசாய சங்கத்தினர் வெள்ளிக்கிழமை தொடங்கிய தொடர் ஓட்ட போராட்டத்தை குமுளி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தேனி மாவட்டம், லோயர் கேம்ப்பிலிருந்து மதுரைக்கு, அம்ருத் என்ற கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை வைகை அணையிலிருந்து தொடங்க கோரி, பாரதிய கிசான் சங்கம், முல்லைப் சாரல் விவசாய சங்கம், கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர் லோயர் கேம்ப் குறுவனூத்து பாலத்திலிருந்து, வைகை அணை வரை தொடர் ஓட்ட போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். 

அதன்படி, வெள்ளிக்கிழமை குறுவனூத்து பாலத்தில் டாக்டர் சதீஷ் பாபு, கொடியரசன் ஆகியோர் தலைமையில் வந்தனர். காவல் ஆய்வாளர் எம்.பிச்சைப்பாண்டியன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்,  போராட்டம் நடத்தவந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று தெரிவித்தனர். போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com