உலக சைக்கிள் நாள் விழிப்புணர்வு பேரணி: 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்பு

உலக சைக்கிள் நாள் விழிப்புணர்வு பேரணியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
உலக சைக்கிள் நாளையொட்டி, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி.
உலக சைக்கிள் நாளையொட்டி, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி.

சேலம்: உலக சைக்கிள் நாள் விழிப்புணர்வு பேரணியில் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 3 தேதி சைக்கிள் ஓட்டுவதன் தனித்துவம் முக்கியத்துவத்தை உணர்த்த உலக சைக்கிள் நாள் கடைபிடிக்கப்படுகிறது

அதன் ஒரு பகுதியாக, பெரியார் பல்கலை கழகம் மற்றும் தனியார் கல்லூரி இணைந்து உலக சைக்கிள் நாளையொட்டி, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் சைக்கிள் பயன்பாட்டை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை கல்லூரி பேராசிரியர் சித்தேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி மாநகராட்சி சாலை ஜவுளிக்கடை பேருந்து நிலையம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா வழியாக 8 கிலோமீட்டர் பயணித்து உத்தமசோழபுரம் பகுதியில் நிறைவு பெற்றது.

இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com