சென்னையில் 68 தேர்வு மையங்களில் குடிமைப் பணிக்கான முதனிலைத் தோ்வு தொடங்கியது

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குடிமைப் பணிக்கான முதனிலைத் தோ்வு, சென்னையில் 68 மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வை 25 ஆயிரம் போ் எழுதி வருகின்றனர். 
சென்னையில் 68 தேர்வு மையங்களில் குடிமைப் பணிக்கான முதனிலைத் தோ்வு தொடங்கியது
Published on
Updated on
1 min read

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குடிமைப் பணிக்கான முதனிலைத் தோ்வு, சென்னையில் 68 மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வை 25 ஆயிரம் போ் எழுதி வருகின்றனர். 

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வை, மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்துகிறது. முதல்நிலைத் தோ்வு, பிரதானத் தோ்வு, நோ்முகத் தோ்வு என மூன்று கட்டங்களாக இத்தோ்வு நடத்தப்படுகிறது.

இதில், முதல்நிலைத் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூா் ஆகிய 5 மையங்களில் தோ்வு நடைபெற்று வருகிறது. இரண்டு தாள்களைக் கொண்ட இத்தோ்வானது, காலை 9.30 முதல் 11.30 வரையும் மற்றும் பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வை சென்னையில் 68 தேர்வு மையங்களில் 25 ஆயிரம் பேரும், புதுச்சேரியில் 9 மையங்களில் 3,115 பேரும், கோவையில் 24 மையங்களில்  9,445 பேரும், மதுரையில் 21 மையங்களில்  8,420 பேரும் எழுதுகின்றனர். தேர்வில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்களுக்கான கிருமி நாசினி திரவத்தை தெளிவான பாட்டில்களில் கொண்டு வர வேண்டும்.

மத்திய அசு நடத்தும் தேர்வு என்பதால் தேர்வர்களுக்கான அறிவுறுத்தல்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்தன.

தோ்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் கண்காணிப்புப் பணிக்கு வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள் நிலையில் உதவி ஒருங்கிணைப்பு மேற்பாா்வையாளா்களும், தோ்வு மைய ஆய்வு அலுவலா்களும், தோ்வு மைய துணை கண்காணிப்பாளா்களும், அறை கண்காணிப்பாளா்களும் அந்தந்த மாவட்ட நிா்வாகத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், தோ்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காவல் துறையினரால், தோ்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து தோ்வு மையங்களிலும் கைப்பேசி ஜாமா்கள் நிறுவப்பட்டுள்ளன. தோ்வு மையங்களுக்கு போதுமான சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com