மேக்கேதாட்டு: 'காவிரி மேலாண்மை ஆணைய விவாதத்தை எதிர்ப்போம்'

மேக்கேதாட்டு விவகாரத்தில் விவசாயிகள் மற்றும் மக்களின் நலன்களையும் உரிமைகளையும் காக்கும் வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்


மேக்கேதாட்டு விவகாரத்தில் விவசாயிகள் மற்றும் மக்களின் நலன்களையும் உரிமைகளையும் காக்கும் வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து அளித்த போது, அவரும் தமிழ்நாட்டின் இசைவில்லாமல் எந்த அனுமதியும் மேகதாது திட்டத்திற்கு அளிக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளதால், மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம்  விவாதிக்ககூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டு குறித்து விவாதிக்க அதிகாரம் உள்ளது என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்து  முரண்பாடாக உள்ளது. மேக்கேதாட்டு விவகாரம் ஆணையத்தின் எல்லை வரம்புக்கு அப்பாற்பட்டது. இதனால்,  காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேக்கேதாட்டு குறித்து விவாதிக்க எதிர்ப்பு பதிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com