
பாமக தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அன்புமணி ராமதாஸ், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் கடந்த மே 28-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற முடிவு செய்த அன்புமணி, மே 29-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் புதிதாக 185 பேருக்கு கரோனா
இதைத் தொடர்ந்து, தற்போது அவர் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று நான் சந்தித்த போது, பாமக தலைவராக பொறுப்பேற்றமைக்காக எனக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். கோதாவரி - காவிரி இணைப்பு, நீட் விலக்கு, காலநிலை மாற்றம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நான் முன்வைத்தேன்."