கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக் கடை ஊழியா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலைக் கடை பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலைக் கடை பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை மீண்டும் வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நியாய விலைக் கடை பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த இரண்டு நாள்களாக அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிா்த்து 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அமுதம், சிந்தாமணி, காமதேனு மற்றும் சுய உதவி குழு நடத்தும் கடைகளை தவிா்த்து பிற சங்கங்களைச் சோ்ந்த ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனால், பல்வேறு மாவட்டங்களில் நியாய விலைக் கடைகள் திறக்கப்படாததால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனா். வரும் 13-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த சில சங்கங்களும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com