
சென்னை: காவல்துறை புகார் ஆணையம் அமைப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமான நபர்களை ஏன் நியமிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உயர் அதிகாரிகளுக்கு எதிரான புகாரை அவர்களே எப்படி விசாரிக்க முடியும் என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.
உள்துறை செயலாளர் தலைமையில் காவல்துறை புகார் ஆனையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் நீதி மையத்தின் ஏ.ஜி.மவுரியா வழக்கு தொடர்ந்ததையடுத்து, காவல்துறை புகார் ஆணையம் அமைக்கும் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து விளக்கம் தர இறுதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...