தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: முதல்வர் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் புதிதாக 219 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 129, செங்கல்பட்டில் 41 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு 34,56,916-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, முகக் கவசம், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறும் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு மேலும் 10 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை காலை 10,.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

இதில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பிற துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com