திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ திருத்தளிநாதர் சுவாமி, ஸ்ரீயோக பைரவர் திருக்கோயில் வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ திருத்தளிநாதர் சுவாமி, ஸ்ரீயோக பைரவர் திருக்கோயில் வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்த ஆண்டுக்கான விழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தினந்தோறும் பல்வேறு மண்டகப்படிகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவில் தேருக்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார் வழிபாடு செய்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

தேரானது தேரோடும் வீதி, போஸ்ட் ஆபிஸ்தெரு, காரைக்குடி ரோடு, நான்கு ரோடு வழியாக வந்த மீண்டும் நிலையடைந்தது.  தேரோட்டத்தையொட்டி முதல் தேரில் விநாயகரும், இரண்டாவது தேரில் சோமஸ்கந்தர் பிரியாவிடையம்மனும், மூன்றாவது தேரில் சிவகாமி அம்மனும் எழுந்தருளினர்.

மூன்று தேர்களில் எழுந்தருளிய சுவாமிகளுக்கு பக்தர்கள் வழியெங்கிலும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். கோயில் ஆதீனகர்த்தரான குன்றக்குடி பொன்னம்பல அடிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கரோனா கட்டுபாடுகளால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் திரண்டு வந்திருந்தனர். இதனால் கோவில் சுற்றுப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com