ஆக. 1-க்கு முன் மேட்டூர் அணை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு!

மேட்டூர் அணை கால்வாய் பாசனத்திற்கு குறித்த நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்பாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை


மேட்டூர்: மேட்டூர் அணை கால்வாய் பாசனத்திற்கு குறித்த நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்பாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனம் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,377 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு கரை கால்வாயில் பாசனம் மூலம் 27,000 ஏக்கரும், மேற்குகரை கால்வாய் மூலம் 18,000 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.

ஆண்டுதேறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதிவரை 137 நாள்களுக்கு 9.60 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். பாசனப்பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்தேவை குறையும்.

நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் குறித்த நாளான ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்பாக திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மேட்டூர் அணை கால்வாய் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 112.78 அடியிலிருந்து 112.11 அடியாக சரிந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,526 கனஅடியிலிருந்து வினாடிக்கு 3,996 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 81.44  டி.எம்.சியாக உள்ளது.

மழையளவு 26.80 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com