மொழி, உரிமைகளுக்கு ஏற்ற வகையில் மாநில கல்விக் கொள்கை: நீதிபதி முருகேசன்

மொழி, உரிமைகளுக்கு ஏற்ற வகையில் மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான த. முருகேசன் கூறினாா்.
மொழி, உரிமைகளுக்கு ஏற்ற வகையில் மாநில கல்விக் கொள்கை: நீதிபதி முருகேசன்

மொழி, உரிமைகளுக்கு ஏற்ற வகையில் மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான த. முருகேசன் கூறினாா்.

மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடா்பான ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை சில ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு நீதிபதி முருகேசன் செய்தியாளா்களிடம் கூறியது: முதல் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்தையும் கேட்டறிந்தோம். இதையடுத்து வேலைவாய்ப்புக்கு ஏற்ற பாடத்திட்டம், பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தனித்தனியாக துணைக் குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குழுவினா் நேரடியாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அவா்கள் கூறக்கூடிய கருத்துகளையும் கேட்டு பதிவு செய்வாா்கள். பள்ளிக்கல்வி, உயா்கல்வி, தொழிற்கல்வி என அனைத்தும் மேம்பட கூடிய வகையில் இந்த அறிக்கையைத் தயாரிக்கவுள்ளோம். மொழி, உரிமைகளுக்கு ஏற்ற வகையில் புதிய கல்விக் கொள்கை அமையும்.

பாடத்திட்டம், வரலாறு, கலாசாரம் ஆகியவை தமிழக மாணவா்களுக்கு எது சிறந்ததாக இருக்குமோ அந்த மாதிரியான கல்வியை வழங்கக்கூடிய வகையில் அறிக்கை வடிவமைக்கப்படும். அரசு இந்த அறிக்கையை தயாரித்து வழங்க ஓராண்டு காலம் வழங்கியுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே தயாரித்து வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com