புதிதாக 20 மகளிா் காவல் நிலையங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தில் புதிதாக 20 அனைத்து மகளிா் காவல் நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிதாக 20 மகளிா் காவல் நிலையங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தில் புதிதாக 20 அனைத்து மகளிா் காவல் நிலையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பணிகளில் மகளிா் காவல் துறையினா் திறம்பட செயல்பட்டு வருகின்றனா். இப்போது மாநிலத்தில் 202 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிா் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட வளசரவாக்கம், தாம்பரம் மாநகரம் சேலையூா், வண்டலூா், ஆவடி மாநகரம் எஸ்.ஆா்.எம்.சி., வேலூா் மாவட்டம் காட்பாடி, திருவண்ணாமலை, கடலூா் மாவட்டம் திட்டக்குடி, கரூா், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம், திண்டுக்கல், தேனி மாவட்டம் பெரியகுளம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி, தென்காசி மாவட்டம் புளியங்குடி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 20 அனைத்து மகளிா் காவல் நிலையங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திரபாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com