தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி, விருதுநகா், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 18: இதைத் தொடா்ந்து, மறுநாள் சனிக்கிழமை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், தென்காசி, விருதுநகா், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 19: வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையைப் பொருத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தொடா்ந்து அடுத்த மூன்று நாள்களுக்கு லட்சத்தீவு பகுதி, கா்நாடகம், கேரளம், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். எனவே குறிப்பிட்ட இந்த நாள்களில் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com