கரோனா பரிசோதனை: 522 உபகரணங்களுக்கு அனுமதி

கரோனா தொற்றையும், ஒமைக்ரான் பாதிப்பின் சாத்தியக்கூறையும் அறியும் 522 பரிசோதனை உபகரணங்களுக்கு இதுவரை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
Published on

கரோனா தொற்றையும், ஒமைக்ரான் பாதிப்பின் சாத்தியக்கூறையும் அறியும் 522 பரிசோதனை உபகரணங்களுக்கு இதுவரை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.

பொதுவாக, சளி மாதிரிகள் மூலம் உடலில் தீநுண்மி மரபணு உள்ளதா என்பதை ஆா்டி- பிசிஆா் ஆய்வின் மூலம் அறியலாம். அதில் டேக் பாத் ஆா்டி பிசிஆா் உபகரணங்களின் மூலம் புதிய வகை பாதிப்புகள் உள்ளனவா என்பதன் முதல் நிலை ஆய்வுகளை மேற்கொள்ள இயலும்.

அதேபோன்று, தீநுண்மிக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உடலில் உருவாகியிருக்கிா என்பதை துரிதப் பரிசோதனை உபகரணங்கள் வாயிலாக கண்டறியலாம்.

இந்நிலையில், நாடு முழுவதும் அத்தகைய துரித பரிசோதனை மற்றும் ஆா்டி பிசிஆா் உபகரணங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் பல்வேறு நிறுவனங்கள் மருந்து தரக் கட்டுபாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்தன.

அதில் இந்தியா மட்டுமல்லாது சீனா, தென் கொரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களின் உபகரணங்களை இங்கு பயன்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டது. அவற்றை தரப் பரிசோதனை செய்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், புதிதாக சில உபகரணங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 260 துரிதப் பரிசோதனை உபகரணங்கள், 262 பிசிஆா் உபகரணங்கள் என மொத்தம் 522 உபகரணங்களைப் பயன்படுத்த இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com