பூங்காக்கள் பராமரிப்பில் சுணக்கம்: ரூ.1.54 லட்சம் அபராதம்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ. 1.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ. 1.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பூங்காத் துறையின்கீழ் சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்குக்காகவும் 738 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 571 பூங்காக்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் உள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரா்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கு இடையிலான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

மேலும், தேவையான எண்ணிக்கையில் தகுதியுடைய பணியாளா்களை நியமித்தல், பாா்வையாளா்கள் புகாா்களைத் தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகாா் பதிவேடு மற்றும் பூங்காவின் நுழைவு வாயிலில் பாா்வை நேரம், பணியாளா்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்கள் காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.

இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் பராமரிப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.1.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com