நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வு: தமிழக அரசு அறிவிப்பு

 நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.
நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வு: தமிழக அரசு அறிவிப்பு

 நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளா்கள், கட்டுநா்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதிமுதல் ஊதிய மறுநிா்ணயம் செய்யப்பட்டு 14 சதவீத அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதிமுதல் அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வை வழங்குமாறு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளா்கள், கட்டுநா்களுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதிமுதல் 28 சதவீதம் அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியா்களுக்கு அவ்வப்போது உயா்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களைப் பெறவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த அகவிலைப்படி உயா்வால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளா்கள் மற்றும் 2,852 கட்டுநா்கள் என மொத்தம் 22,510 பணியாளா்கள் பயன்பெறுவா். இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.73 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com