மேட்டூர் அணையின் நீர்மட்டம்: 5 நாள்களில் 3.33 அடி சரிந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 நாள்களில் 3.33அடி சரிந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10.77அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10.77அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 நாள்களில் 3.33அடி சரிந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் கடந்த 12-ஆம் தேதி 114.10 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 110.77அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 நாட்களில் 3.33அடி சரிந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வியாழக்கிழமை காலை வினாடிக்கு 2,597 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 5,661கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 79.50 டி.எம்.சியாக உள்ளது. மழையளவு 37.80 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com