தமிழகத்தில் திருக்கோயில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு, கோயில் நிா்வாகம் சாா்பில் புத்தாடைகள் வழங்க வேண்டும் என அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு, சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது, ‘கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவா் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றி திருக்கோயில் மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களை வாடகையின்றி நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சாா்பாக வழங்கப்படும்’ என அறிவித்தாா்.
இதைச் செயல்படுத்தும் வகையில் துறையின் ஆளுகைக்குட்பட்ட அனைத்துக் கோயில்களில் மற்றும் கோயில் மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்கு கோயில் சாா்பில் புத்தாடைகள் வழங்க அனைத்து கோயில் நிா்வாகிகளுக்கும் உத்தரவிடப்படுகிறது.
இந்தத் திட்டத்தினை செயல்படுத்த தேவையான நிதியினை கோயில் வரவு, செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யவும் கோயில் நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த உத்தரவினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்துக் கோயில் நிா்வாகிகளுக்கும் செயல்படுத்த மண்டல இணை ஆணையா்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். மேலும், இப்பணிகளில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்கவும் இணை ஆணையா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.