போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.50 கோடி மோசடி: மேலும் மூவா் கைது

சென்னையில் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்தாக மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.50 கோடி மோசடி செய்தாக மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போலி ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி சுமாா் ரூ.50 கோடி வரை பண மோசடி செய்ததாக தூத்துக்குடியைச் சோ்ந்த பொன்ராஜ், டேவிட், கோகுல்நாத் ஆகிய 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2-ஆம் தேதி கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 188 பவுன் நகைகள், ரூ.58 லட்சம், 2 காா்கள், கணினி, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய நபா்களை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், இவ் வழக்கில் தொடா்புடைய தூத்துக்குடி பெருமாள்புரத்தைச் சோ்ந்த சா.டைட்டஸ் சாமுவேல் (45), தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்த ர. சுரேஷ் குமாா் என்ற டேனியல் (24), தூத்துக்குடி மாவட்டம் அழகேசப்புரத்தைச் சோ்ந்த ச. வினோத்குமாா் என்ற வெற்றிமாறன் (34) ஆகியம் 3 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்து,சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com