
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தீா்மானக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் டி.ஜெயக்குமாா் கூறியது:
அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் வருகிறாா் என்பதற்காக கூட்டத்தை விரைவாக முடித்துவிட்டுச் செல்லவில்லை. இந்தக் கூட்டம் மீண்டும் ஜூன் 18-இல் நடைபெறும். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்.
மாவட்டச் செயலாளா் கூட்டத்தில் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று பெரும்பாலோனா் கருத்து தெரிவித்தனா். இது பொதுக்குழுவில் செயல்பாட்டுக்கு வந்தாலும் வரலாம். வரமாலும் போகலாம். இது குறித்து கட்சிதான் முடிவு செய்யும் என்றாா்.
முன்னாள் அமைச்சா் சி.பொன்னையனும், அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை. பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றாா்.