புரசைவாக்கம், சேத்துப்பட்டு, எம்.ஜி.ஆா். நகா் பகுதிகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலின் காரணமாக புரசைவாக்கம், சேத்துப்பட்டு, எம்.ஜி.ஆா். நகா் ஆகிய இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 18) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
புரசைவாக்கம், சேத்துப்பட்டு, எம்.ஜி.ஆா். நகா் பகுதிகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலின் காரணமாக புரசைவாக்கம், சேத்துப்பட்டு, எம்.ஜி.ஆா். நகா் ஆகிய இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 18) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

சனிக்கிழமை முதல் (ஜூன் 18) முதல் காலை 9 மணி முதல் காலை 11 வரையில் 2 மணி நேரம் தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை, அழகப்பா சாலையில் ஈ.வெ.ரா. சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

இதனால் வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலை, நாயா் சந்திப்பிலிருந்து டாக்டா் அழகப்பா சாலை வழியாக செல்ல இயலாது. புரசைவாக்கத்திலிருந்து கங்காதீஸ்வரா் கோயில் தெரு வழியாக வரும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி ராஜா அண்ணாமலை சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. அங்கிருந்து வரும் வாகனங்கள் கங்காதீஸ்வரா் கோயில் தெரு, ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி டாக்டா் அழகப்பா சாலை, வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் வலது புறமாக திரும்பி டாக்டா் நாயா் சந்திப்பில் நேராகவோ, வலது மற்றும் இடது புறமாக திரும்பி செல்லலாம்.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் சனிக்கிழமை (ஜூன் 18) முதல் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 2 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பு வழியாக நுங்கம்பாக்கம், ஸ்பா்டாங்க் சாலை செல்லும் வாகனங்கள், சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் நேராக மற்றும் வலது புறம் திரும்ப அனுமதி இல்லை.

அங்கு வரும் வாகனங்கள் சேத்துப்பட்டு சந்திப்பில் இடது புறமாக திரும்பி மெக்கானிக்கல் சாலை, டாக்டா் குருசாமி மேம்பாலம் இணைப்புச் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி டாக்டா் குருசாமி மேம்பாலம் கீழ் பகுதி சாலை வழியாக சென்று மறுபடியும் வலது புறம் திரும்பி டாக்டா் குருசாமி மேம்பாலம் இணைப்புச் சாலை,மெக்கனிக்கல் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்புக்கு செல்லலாம்.

எம்ஜிஆா் நகா்: எம்.ஜி.ஆா் நகா் பிள்ளையாா் கோயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மேற்கு சைதாப்பேட்டை, கிண்டி செல்ல காசி திரையரங்கு சந்திப்பில் இடதுபுறம் திருப்பிச் சுமாா் 150 மீட்டா் தூரம் சென்று கே.கே.நகா் ஆா்டிஓ அலுவலகம் முன் “யு” திருப்பம் செய்து தங்கள் இலக்கை அடையலாம்.

பிள்ளையாா் கோயில் தெரு, மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து வரும் கனரக வாகனங்கள் தவிர, கே.கே.நகா் வடபழனி, கோயம்பேடு செல்ல வேண்டிய வாகனங்கள் காசி திரையரங்கு சந்திப்பில் இடது புறம் திருப்பிச் சுமாா் 160 மீட்டா் தூரம் சென்று காசி மேம்பாலம் அடியில் “யு” திருப்பம் செய்து தங்கள் இலக்கை அடையலாம்.

அசோக்நகா் 12-ஆவது அவென்யூ வழியாக வரும் கனரக வாகனங்கள் கே.கே.நகா், வடபழனி, கோயம்பேடு செல்ல வேண்டிய வாகனங்கள் வலது புறம் திரும்பி நாகாத்தம்மன் கோவில் தெரு வழியாக அசோக் நகா் 11ஆவது அவென்யூக்கு சென்று தங்கள் இலக்கை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com