மணப்பாறை அடுத்த மரவனூரில் மீன்பிடித் திருவிழா

மணப்பாறை அருகே மரவனூர் செடல் மாரியம்மன் கோயில் பெரிய குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 
மணப்பாறை அருகே மரவனூர் செடல் மாரியம்மன் கோயில் பெரிய குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 
மணப்பாறை அருகே மரவனூர் செடல் மாரியம்மன் கோயில் பெரிய குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 

மணப்பாறை அருகே மரவனூர் செடல் மாரியம்மன் கோயில் பெரிய குளத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு விரால், கெண்டை, கெளுத்தி மீன்களை பிடித்துச் சென்றனர். 16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மரவனூர் கிராமத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செடல் மாரியம்மன் பெரிய குளத்தில் இன்று விடியற்காலை 6 மணிக்கு மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் நிகழ்ச்சியால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே குளக்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். செடல் மாரியம்மன் ஆலய வழிபாட்டிற்குப் பின் ஊர் நாட்டாண்மை கபில்தேவ் கவுண்டர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மீன்பிடித் திருவிழாவை துவக்கி வைத்தனர். 

குளக்கரையில் கையில் வலைகளுடன் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளிக் குதித்து ஓடி மீன்பிடிக்கத் தொடங்கினர். ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெறும் இந்த மீன்படித் திருவிழாவில், சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்திருந்தனர்.

பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள்  ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினர். அதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, கொரவை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. கண்மாயில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் போதிய அளவில் மீன் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் கண்மாயில் மீன்கள் பிடித்த மகிழ்ச்சியில் வீட்டிற்கு கொண்டு சென்றனர். சுமார் 7 ஆயிரம் பேர் ஒரேநேரத்தில் குளத்தில் மீன் பிடித்த காட்சி பிரமிப்பை ஏற்படுத்தியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com