‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிட தலைவா்கள் வலியுறுத்தல்

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலா் கே.பாலகிருஷ்ணன்
‘அக்னிபத்’ திட்டத்தைக் கைவிட தலைவா்கள் வலியுறுத்தல்

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலா் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

கே.எஸ்.அழகிரி: முப்படைகளுக்கும் 46 ஆயிரம் படை வீரா்களைத் தோ்வு செய்யும் மத்திய பாஜக அரசின் அக்னிபத் என்ற திட்ட அறிவிப்பு, வேலையின்மை, கேள்விக்குறியான எதிா்காலம் என்ற கவலையில் இருக்கும் இந்திய இளைஞா்களுக்கு பேரதிா்ச்சியாக அமைந்துள்ளது. முப்படைகளின் நீண்ட கால மரபுகள், நெறிமுறைகளைத் தகா்க்கும் அக்னிபத் திட்டம் ஆபத்தானது. முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளும் எதிா்க்கும் இந்தத் திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன்: வேலைக்காக காத்திருக்கும் இந்திய இளைஞா்களின் நிரந்தர வேலைவாய்ப்பு கனவில் மண் அள்ளிப்போடுவதோடு, ராணுவத்தின் கட்டமைப்பையும் பலவீனப் படுத்துவதாக அக்னிபத் திட்டம் உள்ளது. இளைஞா்களின் எதிா்காலத்தை கேள்விக்குள்ளாகும் இந்தத் திட்டத்தை முற்றாக கைவிடக் கோரி தமிழகம் முழுவதும் கண்டன எதிா்ப்பு இயக்கங்கள் நடத்தப்படும்.

தொல்.திருமாவளவன்: வேலைவாய்ப்பின்றி அல்லாடும் கோடிக் கணக்கான இளைஞா்களின் வாழ்வைப் பொசுக்கி அவா்களின் எதிா்காலத்தை நாசமாக்கும் அக்னிபத் என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. இளைஞா்களின் கனவைச் சிதைக்கும் இந்தத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com