
சா்க்கரை நோய் பாதிப்பால் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது அவா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நிலையில், இனிய நண்பர் விஜயகாந்த் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து விஜயகாந்த், அவ்வப்போது மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறாா்.
இந்நிலையில், சா்க்கரை நோய் பாதிப்பு, கால் வீக்கம் காரணமாக அண்மையில் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனைக்குப் பிறகு வீடு திரும்பிய அவா், மீண்டும் கடந்த இரு நாள்களுக்கு முன்பாக மருத்துவமனைக்கு சென்றாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லை. இதனால், வலது கால் விரல்களை அகற்ற பரிந்துரைத்தனா்.
இதையும் படிக்க | அதிமுகவில் அராஜகப்போக்கு! தர்மம் மறுபடியும் வெல்லும்: ஓ.பி.எஸ்.
இதையடுத்து திங்கள்கிழமை அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு விரல் அகற்றப்பட்டது.
மருத்துவா்கள் கண்காணிப்பில் தற்போது அவா் நலமுடன் உள்ளாா். தொடா்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இனிய நண்பர் விஜயகாந்த் விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்க பதிவில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மரà¯à®¤à¯à®¤à¯à®µà®®à®©à¯à®¯à®¿à®²à¯ à®à®¿à®à®¿à®à¯à®à¯ பà¯à®±à¯à®±à¯à®µà®°à¯à®®à¯ à®à®©à®¿à®¯ நணà¯à®ªà®°à¯ விà®à®¯à®à®¾à®¨à¯à®¤à¯ பà¯à®°à®£ à®à¯à®£à®®à®à¯à®¨à¯à®¤à¯,  மà¯à®´à¯ நலமà¯à®à®©à¯ வà¯à®à¯ திரà¯à®®à¯à®ª விரà¯à®®à¯à®ªà¯à®à®¿à®±à¯à®©à¯. விரà¯à®¨à¯à®¤à¯ à®à¯à®£à®®à®à¯à®¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®à®¿à®±à¯à®©à¯.
â Kamal Haasan (@ikamalhaasan) June 22, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






