சென்னை: அதிமுக பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பொதுக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து அளித்திருந்த கடிதம் அவைத் தலைவரிடம் வழங்கப்பட, அதற்கு அவைத் தலைவரும் ஒப்புதல் அளித்த நிலையில், கூட்டத்திலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறினார்.
சட்டத்துக்கு புறம்பான பொதுக் குழு என்று முழங்கியவாறு, ஓ. பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கமும் கூட்டத்திலிருந்து புறப்பட்டார்.
இதையும் படிக்க.. முதல் சுற்றில் இ.பி.எஸ். வெற்றி?
முன்னதாக, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும், இரட்டைத் தலைமை வேண்டாம் என்று வலியுறுத்தி, பொதுக் குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனிடம், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அளித்தார். இதையடுத்து, ஒற்றைத் தலைமை என்ற பொதுக் குழு உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவித்த தமிழ் மகன் உசேன், அடுத்த பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11ஆம் தேதி கூடும் என்று அறிவித்தார்.
இதையும் படிக்க.. ஜூலை 11இல் மீண்டும் அதிமுக பொதுக்குழுக் கூட்டம்
இவை அனைத்தும் ஓ. பன்னீர்செல்வம் மேடையில் இருக்கும் போதே, அவரைத் தனிமைப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.
இதையடுத்து, சட்டத்துக்குப் புறம்பான பொதுக்குழு என்று வைத்திலிங்கம் கோஷமிட்டார். ஆனால், அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் அவரது குரல் எழுப்பியது வெளியே வரவில்லை. இதையடுத்து, வைத்திலிங்கம் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இருவரும் மேடையிலிருந்து கீழே இறங்கி, பொதுக் குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
அப்போது, கூட்டத்தினரைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னத்தைக் காட்டி கையசைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



