இந்நிலையில், முல்லைப்பெரியாற்றிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 100 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் ஆற்றில் நீர் வரத்து குறைவு ஏற்பட்டதால் காமயகவுண்டன்பட்டி நீரேற்று நிலையத்திற்கு செல்லும் தண்ணீரை மணல்மேடுகள் தடுத்துள்ளதால் சரியான முறையில் நீர் செல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக செயல் அலுவலர் மல்லிகா, பணியாளர்கள், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆற்றில் உள்ள மணல் மேடுகளை அகற்றி நீரேற்று நிலையத்திற்கு தண்ணீரும் வரும்வகையில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வரத்து வரும் அளவில் ஏற்பாடுகளைச் செய்தனர்.