அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இரண்டு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

சீர்காழியில் கணவன் கடன் பிரச்னையில் சிக்கியதால் மனமுடைந்த மனைவி தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :14 மார்ச் 2022, 1:59 pm

DIN

சீர்காழியில் கணவன் கடன் பிரச்னையில் சிக்கியதால் மனமுடைந்த மனைவி தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாங்கூர் கன்னி கோயில் தெருவை சேர்ந்தவர் காக்களிங்கம் மகன் கார்த்திக் (32). இவரும் தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் பாரதி (27) என்பவரும் காதலித்து கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு கௌசிக் என்ற மூன்றரை வயது மகனும், பவதாரணி என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர் . இவர்கள் இருவரும் தற்போது சீர்காழி தென்பாதி யிலுள்ள என் எஸ் பி நகரில் வாடகை குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

லாரி டிரைவரான கார்த்திக் பலரிடம் கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது . சொந்தமாக இடம் வாங்கி, வீடு கட்ட வேண்டும் என பாரதி தனது கணவரிடம் கூறி வந்த நிலையில், கடன் மட்டும் வாங்கி வந்ததால்   மனம் உடைந்த பாரதி தனது கணவர் கார்த்திக் வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில்  தனது குழந்தைகள் இருவரையும் ஜன்னலில் தூக்கு மாட்டி கொன்றுவிட்டு தானும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Story image

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக பாரதி தனது தாய் சித்ராவிற்கு போன் செய்து பேசியுள்ளார். மகள் சோகமாக பேசுவதை கேட்ட சித்ரா உடனடியாக கிளம்பி வந்து பார்த்தபோது பாரதி வசித்த வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனையடுத்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது பாரதியும் அவரது இரண்டு குழந்தைகளும் தூக்கில் பிணமாக தொங்கியதை தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின்போது பாரதி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Story image

அந்த கடிதத்தில் எங்கள் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது நான் எங்கள் அப்பா அம்மாவை விட்டுவிட்டு வந்தது ரொம்ப தப்பு. என் புருஷனுக்கு மூலைக்கு மூலை  கடன் வாங்கி கடன் கொடுக்கத்தான் தெரியும் எங்களுக்கு இடம் வாங்கி வீடு கட்ட தெரியாது. எங்க எதிர்காலம் எப்படி இருக்கும். சரி இல்லை.

அதனால், எதையும் எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை எஸ்பி சுகுணா சிங் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார். 

இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.