திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இளையராஜா இசை நிகழ்ச்சி: சென்னை தீவுத்திடலில் போக்குவரத்து மாற்றம்

சென்னை தீவுத்திடலில் வரும் 18ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறும் இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி நிகழ்சி நடைபெற இருக்கிறது.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:04 pm IST


சென்னை தீவுத்திடலில் வரும் 18ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை நடைபெறும் இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி நிகழ்சி நடைபெற இருக்கிறது.

இதில் சுமார் 15000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை முத்துசாமி பாலம், மன்றோ சிலை வழியாக அண்ணாசாலைக்கு செல்பவர்கள் மற்றும் காமராஜர் சாலையில் இருந்து கொடிமர சாலை வழியாக அண்ணாசாலை மற்றும் ஈவிஆர் சாலை செல்பவர்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. காமராஜர் சாலையில் இருந்து அண்ணா சாலை மற்றும் ஈவிஆர் சாலை செல்பவர்கள், உழைப்பாளர் சிலை சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி வாலாஜா சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை வழியாக ஈவிஆர் சாலையை அடையலாம்.

2. இராஜாஜி சாலை, பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், ஆர்பிஐ சுரங்கப்பாதை வழியாக செல்லாமல், வடக்கு கோட்டை பக்க சாலை, முத்து சாமி சாலை, ஈவிஆர் சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

3. ஈவிஆர் சாலையில் இருந்து போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை நோக்கி செல்பவர்கள், முத்துசாமி சாலைக்கு செல்லாமல், எம்எம்சி பாயிண்டில் வலது புறம் திரும்பி பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

4. அண்ணாசாலையில் இருந்து முத்துசாமி பாலம் வழியாக இராஜாஜி சாலை செல்பவர்கள் பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, முத்து சாமி சாலை வழியாக இராஜாஜி சாலையை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.