
தமிழக அரசின் பட்ஜெட்: பேரவை கூடியது
2022-23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலுக்காக தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது.
அவைத் தலைவர் அப்பாவு, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறு கூறினார்.
இதையடுத்து, 2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பட்ஜெட் உரையை தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் இரண்டாவது ஆண்டாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா். திமுக அரசு தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட் இதுவாகும்.
சட்டப்பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டிருந்தன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...