
சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் தொற்று காரணமாக ஒரு மான் உயிரிழந்திருப்பதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் மூன்று மான்கள் உயிரிழந்த நிலையில் அவற்றின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் ஒரு மானுக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இரு மான்களுக்கும் தொற்று இருக்க வாய்ப்புள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐஐடி வளாகத்தில் விலங்குகளின் அருகில் மக்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆந்த்ராக்ஸ் எனும் தொற்று குறிப்பாக விலங்குகளுக்கு ஏற்படக்கூடியது. விலங்குகளை கையாளும் மனிதர்களுக்கும் ஏற்படலாம். 'பாசில்லஸ் ஆந்த்ராசிஸ்' எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...